புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-19 17:36 GMT

பயணிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புதிய பஸ் நிலையம் ஆக்கிரமிக்கப்பட்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் பயணிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்சன், தேவகோட்டை.

குரங்குகள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியில் நாய்கள், குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்துகிறது.மேலும் இப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசமும் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை குரங்குகள் துக்கிச் செல்கின்றது.எனவே அச்சுறுத்தும் நாய்கள், குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகன், பள்ளத்தூர்.


பள்ளமான சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை பெயர்ந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் பயணிப்பது மிகுந்த சவாலாகவே உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாராம், திருப்புவனம்.


தொற்றுநோய் அபாயம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கொங்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சாலையை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீ, இளையான்குடி.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தெருநாய்கள் தொல்லைய கட்டுப்படுத்த வேண்டும்.

குமார், காரைக்குடி.


Tags:    

மேலும் செய்திகள்