தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் விளக்கு வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே கூடுதல் மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
குடிநீர் வசதி தேவை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.