'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை பணிகள் விரைவு பெறுமா?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்க உள்ளது. இந்த விழாவை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் பயணியர் விடுதி முன்பு இருந்து எல்.ஐ.சி. அலுவலகம் வரை சாலையின் ஒருபுறம் தோண்டப்பட்டு புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மற்றொரு புற சாலையை மட்டும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, பக்தர்கள் நலன் கருதி, ஆடித்தபசு திருவிழாவுக்கு முன்பாக சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பாலாஜி, சங்கரன்கோவில்.
* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக மார்க்கெட்டுக்கு அருகில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாைலயை பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் தினமும் பயன்படுத்துகின்றனர். ஆகையால் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சுரேஷ், சிவகாமிபுரம்.
குடிநீர் வருமா?
கடையநல்லூர் தாலுகா நயினாரகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மங்களபுரம் அருகில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில், குழாய் அமைத்து குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. தற்போது அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரிசெய்து, குழாய்களை புதுப்பித்து உள்ளனர். ஆனால் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வெயிலின் தாக்கத்தால் குடிநீர் தொட்டி மீண்டும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு விரைந்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சுரேஷ்குமார், சமத்துவபுரம்.
வாறுகாைல சீரமைக்க வேண்டும்
ெதன்காசி தாலுகா குலசேகரப்பட்டி ஊராட்சி இந்திராநகர் பகுதியில் வாறுகால் உள்ளது. அதை சீரமைப்பதற்காக உடைத்தனர். ஆனால், இன்னும் சீரமைக்கவில்லை. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வாறுகாலை சீரமைத்து கழிவுநீர் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏமேந்திரன், இந்திராநகர்.
ரெயில் பயணிகள் அவதி
தென்காசி ெரயில் நிலையத்தில் மின்தடை ஏற்படும் நேரங்களில், ெரயில்கள் வருகை குறித்த அறிவிப்புகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இது அடிக்கடி நடைபெறுகிறது. எனவே மின்தடை ஏற்படும் நேரங்களில் ெரயில் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்களை இயக்கி, வழக்கம்போல் ரெயில் வரும் நேரம், எந்த பிளாட்பாரத்தில் வரும் என்பன போன்ற அறிவிப்புகளை பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
- சுந்தர், பாவூர்சத்திரம்.