புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-06-16 17:07 GMT

புதர்களை அகற்ற வேண்டும்

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த சாலையில் ராணித்தோட்டம் பணிமனை பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் ஓடையில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. விஷ பூச்சிகளின் கூடாரமாக மாற வாய்ப்புகள் உள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, கழிவுநீர் ஓடையில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.சிவகுமார், கோட்டார்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

முழுக்கோடு ஊராட்சியில் முதப்பன்கோட்டில் இருந்து மடத்துவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஊராட்சி சார்பில் பக்கச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அதனை ஆக்கிரமித்து சிலர் கட்டுமான பணியை செய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்பார்களா?.

-வா.அனில்குமார், முழுக்கோடு.

சேதமடைந்த மின்கம்பம்

உண்ணாமலைக்கடை பேரூராட்சி சாமவிளையில் இருந்து பூவன்கினான்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து அருகில் நிற்கும் மரத்தின் மீது சாய்ந்து நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.குமாரதாஸ், பூவன்கினான்விளை.

விபத்து அபாயம்

திருவட்டார் அடுத்த சாரூர் கொக்கவிளையில் இருந்து மடத்துகடவு வழியாக பரளி ஆற்றுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள கருங்கற்கல் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன் இரவு நேரம் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சித், சாரூர்.

எரியாத மின்விளக்குகள்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வைத்தியநாதபுரம் ஆற்றங்கரை சந்திப்பில் ஒரு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்கோபுர மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.வி.நாராயணன், வைத்தியநாதபுரம்.

பட்ட மரத்தை அகற்றுவார்களா?

திற்பரப்பு பேரூராட்சி அஞ்சுகண்டறை சந்திப்பில் இருந்து சானல் கரை வழியாக பேச்சிப்பாறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஒரு ராட்சத மரம் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், தும்பகோடு.

Tags:    

மேலும் செய்திகள்