புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-06-14 17:19 GMT

சீரமைக்கப்பட்டது

குழித்துறை நகராட்சியின் பராமரிப்பில் வெட்டுவெந்நி சந்திப்பில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரின் நினைவாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் பெயர் பலகை தெளிவாக எழுதப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் மூலம் பூங்காவின் பெயர் பலகை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

விபத்து அபாயம்

தாழக்குடியில் இருந்து பீமநகரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.

பஸ் வசதி தேவை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால், நாகர்கோவிலுக்கு செல்ல அப்துல்காதர் சந்திப்பு, இருளப்பபுரம் சந்திப்புக்கு சென்று பஸ் ஏறவேண்டி உள்ளது. இதனால், அப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷாஜஹான், வேதநகர்.

வீணாகும் குடிநீர்

ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியின் அருகே சாலையில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து வீணாகும் குடிநீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து பீச்ரோடு சந்திப்பு வரை உள்ள சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், சாலை முறையாக சீரமைக்ப்பாடாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், கோட்டார்.

சாலை சீரமைக்கப்படுமா?

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் வெட்டுவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விபின், வெட்டுவிளை வீடு. 

Tags:    

மேலும் செய்திகள்