'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி தஞ்சை மாநகரின் மைய பகுதியில் உள்ள காமராஜ் மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டது. இந்த மார்க்கெட்டின் கிழக்கு, தெற்கு திசை சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் வடக்கு, மேற்கு திசையில் சுவர், குறிப்பாக வடமேற்கு திசையில் உள்ள சுவர் சிதிலமடைந்து மிகவும் மோசமாக, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சங்கரன், தஞ்சை.