'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவு வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவு வருமாறு:-
நிறுத்தப்பட்ட சாலை பணி மீண்டும் தொடங்குமா?
மயிலாடுதுறை மாவட்டம் வடகரை இக்பால் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சாலை வசதி இல்லாததால் புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது. இதில் சாலை அமைக்கும் பணி பாதி தூரம் மட்டுமே நடந்தது. அதன் பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சாலை போடாத இடங்களில் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இக்பால் தெருவாசிகள், வடகரை.