ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; கலெக்டரிடம் கூட்டமைப்பினர் மனு

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-08-24 16:21 GMT

தேனி மாவட்ட அளவிலான ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பால்ராஜ், செயலாளர் சின்னபாண்டி ஆகியோர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகமெங்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உயிர்பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாக்க விசாரணை ஆணையம் அமைத்து, இழந்த உள்ளாட்சி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிர்வாக ரீதியிலான இடர்பாடுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்