பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தன.

Update: 2023-03-09 19:16 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் சார்ந்த போட்டிகள் வட்டார அளவில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமை தாங்கி, கண்காட்சி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் செல்வகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் அய்யப்பன் வரவேற்றார். போட்டிகளின் நடுவர்களாக ஆசிரியர்கள், கருத்தாளர்கள் செயல்பட்டனர்.அன்றாட வாழ்வில் காற்றழுத்தம், வெப்பம், வேதியியல் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அமிலம் காரம் வேறுபாடு, காற்றழுத்த தாழ்வு செயல்பாடு, நீர்த்தெளிப்பான், காற்று விரிவடைதல், நீர் சுழற்சி, மாய எழுத்து, மாய பலூன், இயற்கை நீரூற்று, நுரையீரல் செயல்பாடு, அடிக்குழாய் செயல்படும் விதம் போன்றவை இடம் பெற்றிருந்தன. அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை சார்ந்த 17 பள்ளிகளில் இருந்து 58 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் அரியலூரில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்