பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

Update: 2023-03-27 18:45 GMT

பொள்ளாச்சி

கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள் நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 237 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இதில் கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 9-ந்தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்