மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்
மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றது.
திருவாடானை,
திருவாடானையில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாடானையில் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த 32 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுநர்கள்,ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.