தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கலெக்டர் வழங்கினார்

தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-07-18 18:45 GMT


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 22 மாணவ- மாணவிகள் மாலை நேர சிறப்பு வகுப்பில் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு இணையவழி தனித்திறன் போட்டிகளாக படம் பார்த்து கவிதை எழுதுதல், சுய கற்பனையில் கதை கூறுதல் போன்றவை நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் பணியாற்றும் தன்னார்வலரின் பணி குறித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர் இந்துமதி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்