கும்பாபிஷேக விழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே போட்டி போலீஸ் நிலையம் முற்றுகை

கே.வி.குப்பம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-08-24 16:29 GMT

கே.வி.குப்பம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோவில் கும்பாபிஷேகம்

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில், காங்குப்பம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட துருவம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஒண்டி பிள்ளையாரை வழிபட்டு வருகின்றனர். இதற்காக தனியாக கட்டப்பட்டுள்ள கோவிலில் ஒண்டி பிள்ளையாரை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதன் அருகில் கடந்த 13 ஆண்டுகளாக கெங்கையம்மன் கோவில் உள்ளது. இதற்கென்று தனி கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது.

கெங்கையம்மனுக்கும் தனி கோவில் கட்டி ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வருகிற 1-ந்தேதி இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக யாகசாலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இந்த விழா குழுவில் ஒரு தரப்பினர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதை விசாரிப்பதற்காக போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர். இருதரப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு போலீஸ் நிலையத்திற்குள் அழைத்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இருதரப்பை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது இருந்த விழாக் குழுவினர்களைக் கொண்டு இப்போது நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மற்றொரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என கூறி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்