கிருஷ்ணகிரியில் மாவட்ட தேக்வாண்டோ போட்டி

Update: 2022-11-08 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 14, 17 மற்றும் 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 520 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆர்வமுடன் விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியிலும், நீச்சலில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் காஞ்சீபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். தேக்வாண்டோ போட்டியை தேசிய தேக்வாண்டோ நடுவர் சுதாகர், தேசிய விளையாட்டு நிறுவன பயிற்சியாளர் வீரமணி, தேசிய நடுவர் சிவகுமார் மற்றும் குழுவினர் நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்