குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-09-11 17:27 GMT

திருவெண்காடு:

திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பண்டரிநாதன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவெண்காடு நகரத் தலைவர் நீதி ராஜன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சங்கர் கலந்து கொண்டு பேசினார். கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மழை பாதிப்புகளை கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பூம்புகார் சுற்றுலா வளாகத்தை முறையாக பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருநகரி உப்பநாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்டார செயலாளர்கள் மதியழகன், கணேசன், வர்த்தகப் பிரிவு தலைவர் மாரிமுத்து, வட்டார இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கோவிந்தராஜ் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இளைஞர் காங்கிரஸ் செயலாளர் திருவரச மூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்