ஆரணி பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறை செயல்படாததால் பயணிகள் அவதி

ஆரணி பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறை செயல்படாததால் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-12-26 17:28 GMT

ஆரணி

ஆரணி பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறை செயல்படாததால் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரணி நகரில் 2 பஸ் நிலையங்கள் செயல்படும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் முதன்மையான கழிப்பறை வசதி கூட செய்யவில்லை. பஸ்களில் தொலைதூர ஊர்களில் இருந்து வருபவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு கூட கட்டண கழிப்பறையை தேடிச்செல்ல வேண்டிய அவலம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மின்மோட்டார் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வசதியில்லாமல் கட்டண கழிப்பறையும் செயல்படாமல் உள்ளது. 2 நாட்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய வெளியூர் பயணிகள், உள்ளூர் கடைகளில் பணி புரியும் பெண் தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நகராட்சி நிர்வாகம் அவசர அத்தியாவசிய பணியை மேற்கொள்ள கூட நடவடிக்கை மேற்கொள்ளாத அவல நிலை இருந்து வருகிறது, என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். எனவே இதனை சரி செய்வதோடு இலவச கட்டண கழிப்பறை வசதியும் செய்து பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்