சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

ஊசூரில் சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-21 16:52 GMT

வேலூர் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் ஊசூரில் நேற்று நடந்தது. ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன் தலைமை தாங்கினார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பெருமாள் வரவேற்றார்.

இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சமூக நீதி, மனித உரிமைகள், அதில் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்