கமுதியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கமுதியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

Update: 2022-11-18 18:40 GMT

கமுதி, 

கமுதியில், தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், சமூக நலத்துறை சார்பில், 286 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகரச்செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகரச் செயலாளர் முத்துஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் கர்ப்பிணிகள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்