கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-12-19 21:12 GMT

பேட்டை:

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நெல்லை அருகே உள்ள கீழபாலாமடை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் கலந்துகொண்டு, 50 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மகளிர் அணி மேகலா, துணை தலைவர் கலைச்செல்வி மாடசாமி, திட்ட அலுவலர் ராஜ பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்