கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கடலாடியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-11-22 18:45 GMT

கடலாடி, 

கடலாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மயிலம்மாள் வரவேற்றார். கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு மற்றும் தட்டு, ஜாக்கெட், பழம், வெற்றிலை பாக்கு, வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தக்காளி சாதம், சர்க்கரை பொங்கல், புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான கலவை சாப்பாடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் உமா, பண்ணையரசி உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்