163 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

குன்னூரில் 163 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது.

Update: 2022-10-01 18:45 GMT

குன்னூர், 

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், குன்னூர் வட்டாரத்தில் உள்ள 163 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஊட்டச்சத்தை தூண்டுதல் என்ற தலைப்பில் குன்னூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள் நலன், பாதுகாப்பு மற்றும் ஆயிரம் பொன்னான நாட்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில் 163 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணிகள் சுகப்பிரவசம் பெற யோகா செய்வது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது. அதில் ஊட்டச்சத்து பொருட்கள் இடம் பெற்றிருந்தது. குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் மால்முருகன், வட்டார மருத்துவ அலுவலர் ஆஜிரா பேகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்