கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-10 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் வட்டார சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டம் சார்பில் திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள தனியார் திருமண மகாலில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் தலைவர் சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் அமுதா அனைவரையும் வரவேற்றார். திருப்புவனம் வட்டார அளவில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் கர்ப்பிணிகளுக்கு 5 வகையான சாதம் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் யூனியன் துணை தலைவர் மூர்த்தி, யூனியன் ஆணையாளர் அங்கயற்கண்ணி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஊட்டச்சத்து மைய ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்