நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-17 18:45 GMT

நாமக்கல்:

குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சியில் விவசாய நிலத்தை விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளாக பிரிக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் அன்புமணி, மாவட்ட உறுப்பினர் குழந்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்