இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 46 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-16 18:45 GMT

சிதம்பரம், 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தேசிய மாதர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி முனைப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

46 பேர் கைது

இந்த மறியல் போராட்டத்திற்கு சித்ரா, குமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். முரளி, விஜய், பவானி, உமா, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர் கண்டன உரையாற்றினார். இதில் வட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, வட்டக்குழுவை சேர்ந்த அனாதி, சந்திரலேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்