இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நகர செயலாளர் விஜயன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் காந்தி சாலையில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக சென்று தென்காசி சாலையில் உள்ள ஒரு வங்கியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். விலை உயர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 9 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல ஆலங்குளத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் நடராசன் தலைமை தாங்கினார். இதில். மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், விருதுநகர் மாவட்ட கட்டிடசங்க மாவட்ட பொருளாளர் மாரியப்பன். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்பட 56 பேர் கைது செய்யப்பட்டனர்.