இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்னவாசல் பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சோலையன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் சலோமி, ஒன்றிய செயலாளர் சுப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் பள்ளூரணியில் குளிக்கும் இடத்தை சுத்தப்படுத்திடவும், முக்கண்ணாமலைப்பட்டி வேளாங்குளத்தில் 70 ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பரம்பூர் பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதியை உருவாக்க வேண்டும். இந்தியாவில் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வேலை கொடுக்க வேண்டும். நாடு முழுவதும் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ள முடிவை கைவிட வேண்டும், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து கிராமப்புற மக்களுக்கும், பல ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு வகையான புறம் போக்குகளில் வாழும் மக்களுக்கும் குடிமனை பட்டாவை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள சட்ட பூர்வ கூலி ரூ. 294 முழுமையாக வழங்கி 100 நாட்கள் வேலையை உறுதியாக கொடுக்க வேண்டும் என்று ேகாஷம் எழுப்பினா்.