இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-13 19:00 GMT

தேனி அல்லி நகரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்