இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-20 18:45 GMT

கோவில்பட்டி:

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏதுவாக, அங்குள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் இன்னாசிமுத்து தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஜி.பாபு, தாலுகா உதவி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்