இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-13 19:32 GMT

க.பரமத்தி ஒன்றியம், குப்பம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட குவாரி மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் படுகொலையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் க.பரமத்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் நாட்ராயன், மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதன் குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் சந்திர சேகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்