இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-13 18:49 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்குநேரியில் பள்ளி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும். சாதி வெறியை தூண்டும் செயலில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில தலைவர் காசி விசுவநாதன், பொதுச் செயலாளர் சடையப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இதில் நிர்வாகிகள் ரெங்கன், முருகன், பாலன், லெனின் முருகானந்தம், பெரும்படையார், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்