இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியேற்று விழா

98-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2022-12-26 17:52 GMT

திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் கட்சியின் 98 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கொடியேற்று விழா மற்றும் கட்சியின் நிறுவனர் சிங்காரவேலர் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் ஆர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் நந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் கலந்து கொண்டு சிங்காரவேலர் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். இதனையொட்டி பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கே.ஆர்.வேணுகோபால், டி.பெருமாள், கே.பி.மணி, பைரோஸ் ராஜா, ஆனந்தன் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்