இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 250 பேர் கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 250 பேர் கைது

Update: 2023-09-13 10:19 GMT

தளி, 

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று உடுமலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.மத்திய பஸ் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சவுந்தரராஜன், இசாக் ஆகியோர் தலைமை வகித்தனர்.அதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு, சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு தவறான ஜிஎஸ்டி கொள்கையால் தொழிலாளர்கள் வேலை இழப்பு, செம்மொழியான தமிழ் மொழியை அழித்து இந்தி சமஸ்கிருத மொழியை திணிக்க முயற்சிப்பது மாநில அரசு உரிமைகளை பறிப்பது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள்.அதைத் தொடர்ந்து உடுமலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 135 பெண்கள் உட்பட 250 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை உடுமலை நகராட்சி மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்தை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்