தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும்-ஆணையாளர் அறிவிப்பு

தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும் என ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Update: 2023-04-07 18:45 GMT

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் பெருநகர பகுதியில் கசடு, கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே சிவகங்கை நகராட்சியில் செயல்படும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் நகராட்சியில் ரூ.2000 செலுத்தி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். மேலும் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்கப்பட வேண்டும். எனவே சிவகங்கை நகராட்சியில் இருக்கும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் உரிமையாளர்கள் உடனடியாக நகராட்சியில் உரிய உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் இயக்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் அவைகள் முன் அறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்