தேனாம்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகளை கமிஷனர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2022-07-17 04:07 GMT

சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் பள்ளிச்சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.8 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப்பணி, டாக்டர் பெசன்ட் தெருவில் ரூ.2.46 கோடியில் மழைநீர் வடிகால் பணி, கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை பணி, தைபூர் அலிகான் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.4.10 லட்சத்தில் கழிவறை அமைக்கும் பணி ஆகியவற்றை நேற்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க நிதியின் கீழ் ரூ.6.25 லட்சத்தில் கானாபாக் தெருவில் அமைக்கப்பட்டு வரும் நல மையத்தின் கட்டிடப் பணிகளையும் கமிஷனர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மத்திய வட்டார துணை கமிஷனர் விஷூ மஹாஜன், மண்டல அதிகாரி ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்