உடுமலை நகராட்சி சந்தையில் நேற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கமிஷன் மண்டிகள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உடுமலை நகராட்சி சந்தையில் நேற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கமிஷன் மண்டிகள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
போடிப்பட்டி,
உடுமலை நகராட்சி சந்தையில் நேற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கமிஷன் மண்டிகள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கமிஷன் மண்டிகள்
உடுமலை ராஜேந்திரா சாலையில் 16 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 34 கமிஷன் மண்டிகள் மற்றும் ஏராளமான நிரந்தர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர வார சந்தை தினமான திங்கள் கிழமைகளில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்கு மிக அருகில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இந்த சந்தை மூலம் பலனடைந்து வருகின்றனர்.
மேலும் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.இதுதவிர கேரள மாநிலத்தின் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதில் உடுமலை சந்தைக்கு பெரும்பங்கு உள்ளது.
சுகாதார சீர்கேடுகள்
இந்தநிலையில் சந்தை வளாகம் மழை காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.அத்துடன் ஆங்காங்கே குவித்துள்ள குப்பைகள் மற்றும் புதர்ச் செடிகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நேற்று ஒருநாள் மட்டும் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளமான பகுதிகள் மண் மற்றும் எம் சாண்ட் கொட்டப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சீரமைக்கப்பட்டது.
இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படும்.அத்துடன் புதர்ச் செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளும் நடைபெற்றது.இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் குறையும். இந்தநிலையில் சந்தை வளாகத்தில் நேற்று பெரும்பாலான சில்லறை விற்பனைக்கடைகள் வழக்கம் போல செயல்பட்டன. ஆனாலும் பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது.
-----------
2 காலம்
உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற போது எடுத்த படம்.