தீபாவளி போனஸ் அதிகமாக வழங்க வேண்டும்
தீபாவளி போனஸ் அதிகமாக வழங்க வேண்டும்
அனுப்பர்பாளையம்
பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி. சங்க பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். கூட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பின்னலாடை நிறுவனங்களில் ஷிப்ட் மற்றும் பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் கடந்த ஆண்டை விட அதிகமாகவும், 20 நாட்களுக்கு முன்பாகவும் வழங்க வேண்டும். இதுதொடர்பான கோரிக்கை கடிதத்தை உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் கொடுப்பது, நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பனியன் தொழிலை மீட்டெடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க பொருளாளர் செல்வராஜ், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.