ரூ.85½ லட்சத்தில் வணிக வளாகம்
காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.85½ லட்சத்தில் வணிக வளாகம் கட்ட கத்ரி ஆனந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்கத்துக்கு சொந்தமான காங்கேயநல்லூரில் உள்ள இடத்தில் கூட்டுறவு வணிக வளாகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக ரூ.85½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காங்கேயநல்லூரில் 2 ஆயிரம் சதுரஅடியில் வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன், 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கலந்து கொண்டு வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
இதில் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு இயக்குனர்கள் தேவசுந்தரம், தேவநேசன், ஜெயவேலு, கண்ணன், தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.