காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு

வேதாரண்யத்தில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது

Update: 2022-10-05 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் மேலவீதி ராஜாஜி பூங்கா அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளும், காமராஜர் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர்கள் உருவபடத்திற்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வேதாரண்யம் காங்கிரஸ் நகர தலைவர் அர்ஜூனன், துணைத்தலைவர் மெய்யாரபிக், முன்னாள் நகர தலைவர் வைரவன், வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் உசேன், ஐ.என்.டி.யூ.சி துணைத் தலைவர் தங்கமணி,பொருளாளர் தாயுமானவன், நகர துணைத்தலைவர் வெங்கட், நகர செயலாளர் செல்வகுமார், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, மகிளா காங்கிரஸ் ரத்னமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்