கடலையூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுதினம்

கடலையூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-08-22 14:18 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்பு உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவுத்தூண் முன்பு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் திராவிட செல்வி, சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு அறக்கட்டளை ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார். யூனியன் குழு உறுப்பினர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நினைவு தூண் முன்பு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சுப்புலட்சுமி, எட்டையபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்