கமாண்டோ படை வீரர்கள் ஆலோசனை
கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டுடன் கமாண்டோ படை வீரர்கள் ஆலோசனை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அதிவிரைவு படையினர் கமாண்டர் சீனிவாசன் தலைமையில் 10 பேர் வந்தனர். மாவட்டத்தில் சாதி மோதல் பிரச்சினையாக உள்ள பகுதிகள் உள்ளனவா என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.