வந்தே பாரத் ரெயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

வந்தே பாரத் ரெயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றபடுகிறது.

Update: 2023-09-28 20:17 GMT


வந்தே பாரத் ரெயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றபடுகிறது.

வந்தே பாரத்

மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இதற்கிடையே கடந்த 26-ந் தேதி முதல் நெல்லையில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது பொதுவாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் வழித்தடத்தில் இரு ரெயில் நிலையங்களுக்கு இடையே எந்த ரெயிலும் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் மதுரையில் இருந்து செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தே பாரத் ரெயிலுக்காக ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ெரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நேர மாற்றம்

எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளின் நலனுக்காக மதுரையிலிருந்து புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்ட நேரமான அதிகாலை 6.40 மணிக்கு இந்த ரெயில் மீண்டும் புறப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த நேரமாற்றம் எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பது பயணிகளின் கருத்தை பொறுத்துத்தான் தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்