மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
வந்தவாசி அருேக மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா ஓட்டகோயில் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். அவரது மகன் வேலு (வயது 30), மதுராந்தகத்தில் உள்ள காய்கறி கடையில் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேவகி.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூரில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். சாலவேடு கிராமம் அருகே சென்ற போது இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் வேலு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.