மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
நெகமம்
திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 47). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாராபுரம் நோக்கி சென்றார். இதேபோன்று புதுப்பாளையத்தில் இருந்து கனகராஜ்(35) என்பவர் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி நோக்கி வந்தார். நெகமம் அருகே சுந்தரகவுண்டனூர் பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேராக மோதின. இதில் கனகராஜ், கணேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். கனகராஜ், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.