மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2022-08-11 13:13 GMT

குடியாத்தம் நெல்லூர் பேட்டை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துவாரகேஷ் (வயது 33). குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (18) கல்லூரி மாணவர். இவர்கள் இருவரும் நிதி நிறுவனத்தின் வேலையாக பேரணாம்பட்டு சென்று விட்டு, குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் வந்தபோது, பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கம்பிகட்டும் தொழிலாளர்களான முருகேசன் (21), துளசி நாதன் (33) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், துவாரகேஷ், சக்திவேல் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களில் துவாரகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவவ்கள அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்