மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் சாவு
ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28), பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அரவிந்தன் ஆம்பூர்-பேரணாம்பட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர், ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் படுகாயம் அடைந்த அரவிந்தன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.