மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் சாவு

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-19 18:55 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 50), லாரி டிரைவர். இவர், நாட்டறம்பள்ளி அருகே உள்ள பங்களா மேடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த வசீகரன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கோவிந்தசாமி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவிந்தசாமி கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்