மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-09-03 18:45 GMT

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). நேற்று முன்தினம் இவர், பெரியகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை மாவட்டம் பாலக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் புல்லக்காபட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சரத்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சரத்குமார் மீது மோதிய ேமாட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சித்தையன்கோட்டையை சேர்ந்த அப்துல் பாசித் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்