மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தாய், மகன் உள்பட 3 பேர் பலி

விருதுநகரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-08-27 23:30 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கட்டங்குடியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சங்கரேஸ்வரி (வயது 42). இவர்களது மகன் ஆனந்தராஜ் (24). இவா் காரியாபட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சங்கரேஸ்வரியும், ஆனந்தராஜிம் கட்டங்குடியில் இருந்து சிவகாசி அருகே உள்ள கூடமுடையார் கோவில் திருவிழாவிற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

பாலவநத்தம் தெற்குப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ரஞ்சித்குமார் (24), அழகுமணி (18) ஆகிய 2 பேரும் விருதுநகரில் இருந்து இறைச்சி வாங்கிக்கொண்டு பாலவநத்தம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சங்கரேஸ்வரி, ஆனந்தராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரஞ்சித்குமார், அழகுமணியும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென மோதின.

3 பேர் பலி

இந்த விபத்தில் சங்கரேஸ்வரி, ஆனந்தராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர். அழகுமணி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த அழகுமணியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்