ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து கொண்ட கல்லூரி மாணவர்கள் - திருத்தணியில் பரபரப்பு

கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து கொண்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-12 07:27 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கல்லூரிக்கு வழக்கம் போல் வருகை முதல் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் திடீரென ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மாணவர்கள் தாக்கி கொண்டதை பார்த்த மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி வகுப்புகளுக்குள் அனுப்பிவைத்தனர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ரேக்கிங் பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து கொண்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்