கல்லூரி மாணவி தற்கொலை

திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-17 20:00 GMT

திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி. கூலித் தொழிலாளி. அவருடைய மகள் சாருலதா (வயது 19). இவர், தாமரைப்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சாருலதா, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்